அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் வசிக்கும் டுவைன் ஹேன்சென் என்பவர், அதிக எடையுள்ள பூசணிக்காயில் அமர்ந்து ஆற்றில் நீண்ட தூரம் சென்று, கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
தனது தோட்டத்தில் வளர்த்த 'பெர்ட்டா' எனப்படும் 384 கிலோ பூசணிக்காயின் மீது அமர்ந்தவாறு, மிசவுரி ஆற்றில் 61 கிலோமீட்டர் தூரம் டுவைன் ஹேன்சென் பயணித்தார்.
இதன்மூலம் தனது முந்தைய சாதனையான 41 கிலோமீட்டர் பயண கின்னஸ் சாதனையை முறியடித்தார்.
இதுகுறித்து பேசிய டுவைன் ஹேன்சென், மிகக்கடினமான இந்த சாதனையை யாரேனும் முறியடித்தால், அவர்களுக்கு தலைவணங்குவேன் என்று தெரிவித்தார்.