உக்ரைன் அதிபரின் திடீர் மனமாற்றம் : இறங்கி வருவாரா புதின்?
நேட்டோ உறுப்பினர் சேர்க்கை கோரி தாம் மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மேற்குலக நாடுகளின் நேட்டோ ராணுவ படையில் தம்மை சேர்த்து கொள்ள விரும்பியதே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு மேல் நேட்டோ உறுப்பினர் சேர்க்கை கோரி தாம் மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஒன்றும் இரவல் நாடு அல்ல என விரக்தியுடன் கூறிய ஜெலன்ஸ்கி, உக்ரைனை ஏற்று கொள்ள நேட்டோ தயாராக இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
இரண்டு கிழக்கு உக்ரைன் பகுதிகளை சுதந்திர நாடுகளாக ரஷ்யா அறிவித்தது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வேண்டுமெனில், அதற்கு ரஷ்ய அதிபர் புதின் தம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வர வேண்டும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.