பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் - கவலை தெரிவிக்கும் அமெரிக்கா

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்வதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரகம் கவலை தெரிவித்துள்ளது.

Update: 2021-10-02 04:10 GMT
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்வதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரகம் கவலை தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக  பாகிஸ்தான் உள்ளதாகவும், அதை பற்றி அமெரிக்கா முன்பு தெரிவித்த ஆட்சேபனைகள், எதிர்ப்புகள் இன்றும் பொருந்துவதாக, அமெரிக்க பாதுபாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளார் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறினார்.  இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க தலைவர்கள் பேசி வருவதாக குறிப்பிட்டார். இத்தகைய பயங்கரவாத குழுக்களினால் பாகிஸ்தான் மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். ஆப்கானிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி ஏற்பட்ட பின், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 35 பயங்கரவாத தாக்குதல்களில் 52 பாகிஸ்தானியர்கள் உயிரிழ்ந்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் தலிபான் அமைப்பு மற்றும் பலுச்சிஸ்தான் விடுதலை படை ஆகியவற்றிற்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்