உலகின் முதல் இரண்டு கோடீஸ்வரர்கள் - ஜெப் பெஸோஸ், எலோன் மஸ்க் மோதல்
உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள எலோன் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க், திங்கள் அன்று, மீண்டும் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில், முதல் இடத்தை பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.எலோன் மஸ்க், ஜெப் பெசோஸ் இடையே, விண்வெளியில் செயற்கை கோள்களை நிறுவுவதில் கடுமையான தொழில் போட்டிகள், மோதல்கள் தொடர்கின்றன. எலோன் மஸ்கின் ஸ்பேஸெக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி ஜெப் பெசோஸின் குய்ப்பெர் சிஸ்டம்ஸ் நிறுவனம், அமெரிக்க தகவல் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் மூன்று வாரங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தது.அமெரிக்காவின் நாசா நிறுவனம் சந்திரனிற்கு மனிதர்களை அனுப்ப, ஒரு விண்கலத்தை வடிவமைக்க ஒப்பந்தம் அளிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை வெல்ல, ஜெப் பெசோஸின் புளு ஆரிஜின் நிறுவனமும், எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் போட்டி போடுகின்றன. இந்நிலையில், உலக கோடீஸ்வர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்த எலோன் மஸ்க், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஜெப் பெசோஸிற்கு, இரண்டு என்ற எண் பொறிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்றையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பரிசாக அளிக்க உள்ளதாக, மின்மடல் மூலம் ஜெப் பெசோஸிடம் தெரிவித்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. உலகக் கோடீஸ்வர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை பல வருடங்களாக கணித்து, வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.