ஆப்கானில் கடந்த கால தாக்குதல்கள் "அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும்" - தலிபான்கள் வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் கடந்த கால தாக்குதல்களுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இல்லை என்றும் பலியானவர்கள் பொதுமக்கள் என்றும் உண்மையைத் தெரிவித்த அமெரிக்கா, பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. இந்நிலையில், இது மட்டுமல்லாது, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள், ஆப்கான் வீரர்களையும் மக்களையும் கொன்று குவித்ததற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தலிபான் அமைச்சர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கப் படைகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.