ஆப்கானிஸ்தான் நிலை கவலை அளிக்கிறது - ஐநாவுக்கான இந்தியா தூதர் கருத்து
ஆப்கானிஸ்தான் நிலை கவலை அளிக்கிறது - ஐநாவுக்கான இந்தியா தூதர் கருத்து
ஆப்கானிஸ்தான் நிலை கவலை அளிக்கிறது - ஐநாவுக்கான இந்தியா தூதர் கருத்து
ஆப்கானிஸ்தானில் நிலவும் பலவீனமான நிலை இந்தியாவுக்கு கவலை அளிப்பதாகவும், தீவிரவாத செயல்களுக்கு தலிபான்கள் துணை போகக்கூடாது என இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரர் திருமூர்த்தி, அண்டை நாடாகவும், மக்களுக்கு நண்பன் என்ற முறையிலும் ஆப்கானிஸ்தான் சம்பவங்கள் கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தான் எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ, தாக்கவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவோ, பயிற்சி அளிக்கவோ கூடாது என்பதால், தலிபான்களின் பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிக்க கூடாது என கேட்டுக் கொண்டார்.ஆப்கானிஸ்தானியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல முடியும் என்ற தலிபான் அறிவிப்பை வரவேற்ற திருமூர்த்தி, அங்கிருந்து வெளியேரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை நம்புவதாக கூறினார்.கடந்த ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பை எடுத்துரைத்த திருமூர்த்தி, மின்சாரம், நீர் வழங்கல், சாலை இணைப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருவதை குறிப்பிட்டார்.ஆப்கானிஸ்தான் மக்களின் நலனிற்காக 34 மாகாணங்களிலும் 500க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருவதையும் திருமூர்த்தி குறிப்பிட்டு பேசினார்.மேலும், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் செயல்படுவதற்கு எந்த தளமும் இருக்க கூடாது என்றதுடன், போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தலிபான்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். .