ஆப்கானில் நிலையான அமைதி: "பேச்சுவார்த்தை உள்ளடக்கிய தீர்வு தேவை"- ஐநா கருத்து
ஆப்கானிஸ்தான் அமைதிக்கு, பேச்சுவார்த்தை, உள்ளடக்கிய தீர்வுதான் அவசியம் என்று ஐநா தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ஐநா செய்தித் தொடர்பாளர், "பொதுவாக அரசாங்கத்தை அங்கீகரிக்கும் செயல்களில் ஐநா ஈடுபடுவதில்லை எனவும், உறுப்பு நாடுகளின் நிர்பந்தத்தால் தற்போது தலையிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆப்கானின் நிலையான அமைதிக்கு பேச்சுவார்த்தை அவசியம் எனவும், அதற்கு தனது பங்களிப்பை ஐநா அளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆப்கானிஸ்தானில், மனித உரிமைகளை நிலைநாட்டல், பெண்கள், குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவித்தல், ஆகியவற்றுடன் உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளும் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.