ஆப்கானிஸ்தான் விவகாரம் பற்றி உரையாடல் : பிரதமர் மோ​டி - ரஷ்ய அதிபர் புதின் பேச்சு

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும், ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாக சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினர்.

Update: 2021-08-25 03:20 GMT
ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் ரஷ்யா அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆப்கனிலிருந்து மக்கள் அகதிகளாக நுழைவதை விரும்பவில்லை என கூறியுள்ளார். அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் இருக்கலாம் என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் . இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் புதினும், தொலைபேசி மூலம் உரையாடி உள்ளனர்.  இரு தலைவர்களும் 45 நிமிடங்களுக்கு மேலாக ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளனர். தற்போதைய சூழலில் இரு நாட்டு தலைவர்களின் தொலைபேசி பேச்சு, முக்கியத்துவம் பெறுகிறது
Tags:    

மேலும் செய்திகள்