18 ஆயிரம் பேரை மீட்ட அமெரிக்கப் படைகள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்
ஆப்கானிஸ்தானில் அபாயம் மிக்க சூழலில் மீட்பு பணிகளை மேற்கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி அதிகாரத்தைப் பறித்ததில் இருந்து ஏராளமான மக்கள் அந்நாட்டில் இருந்து தப்பியுள்ளனர். மேலும் பலர் விமான நிலையங்களை முற்றுகையிட்டு தப்ப முயல்கின்றனர். இந்நிலையில், ஜூலை மாதம் முதல் இதுவரை 18 ஆயிரம் மக்களை அமெரிக்கப் படைகள் மீட்டுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆபத்தான பகுதிகளில் அமெரிக்க படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை தம்மால் உறுதியாக கூற முடியவில்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்