"தலிபான்களுக்கும் வாய்ப்பு அளிக்கலாம்" - ஆப்கானில் பணியாற்றியவர் சிறப்பு பேட்டி
ஆப்கானிஸ்தான் தலிபான் வசமாகியுள்ளதற்கு பலரும் எதிர்மறை கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பு அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரலாம் என்று வலியுறுத்துகிறது. அது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது பார்ப்போம்.
ஆப்கானிஸ்தான் தலிபான் வசமாகியுள்ளதற்கு பலரும் எதிர்மறை கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பு அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரலாம் என்று வலியுறுத்துகிறது. அது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது பார்ப்போம்.சென்னையை சேர்ந்த சமூக சேவகர் புளோரினா, யூனிசெப்பின் கீழ் ஆப்கானிஸ்தானில் நடைபெறக்கூடிய சமூகப் பணிகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.காபூலில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் புளோரினா ஈடுபட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தான் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் தலிபான் குறித்தை பார்வையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்கிறது.தாலிபான்கள் என்றாலே கெட்டவர்கள் என்று முதலில் நினைப்பது தவறு என சுட்டி காட்டும் புளோரினா, ஆப்கான் இயற்கை வளம் மிக்க ஒரு அழகிய நாடு என்றும் தெரிவிக்கிறார். மேலும் தற்போதைய சூழலில் தலிபான்களுக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.