ஆப்கானில் இருந்து தப்பிய பெண் இயக்குநர்: தான் உயிர் பிழைத்ததை விளக்கும் சஹிரா கரிமி

"ஆப்கானில் இருந்து தப்பிச் செல்ல தனது முதல் விமானத்தைத் தவற விட்ட நொடியைத் தன் வாழ்க்கையின் மிகுந்த சோகமான தருணம்" என்று பிரபல ஆப்கான் பெண் இயக்குநர் சஹிரா கரிமி உருக்கமாகத் தெரிவிக்கிறார்...ஆப்கான் நாட்டில் இருந்து அவர் எப்படி தப்பினார்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

Update: 2021-08-19 13:02 GMT
சொந்த நாட்டில் இருந்து தப்ப முயலும் மக்கள்... எங்கெங்கும் அழு குரல்கள்... எத்திசை நோக்கினும் ஆயுதங்கள்... காற்றை நிரப்பும் துப்பாக்கி குண்டுகள்... ஒட்டு மொத்த ஆப்கானும் தலிபான்களுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது...

அமெரிக்கப் படைகள் வெளியேறியது தான் தாமதம்... மின்னலை விட வேகமாய் ஆப்கான் தலிபான்கள் வசமானது...

வலுவற்ற அரசை நம்பி எப்படி ஆப்கான் மக்கள் இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் என்று நினைக்கவே மலைப்பாக உள்ளது...

மீள முடியா அச்சத்தில் உறைந்துள்ள ஆப்கான் பெண் இயக்குநர் சஹ்ரா ஹரீமி, தான் தாய் தேசத்தில் இருந்து தப்பி வந்த காட்சிகளை விவரிக்கிறார்...

"தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி விட்டார்கள் என்ற செய்தி காதுகளில் ஈட்டிகளாய்ப் பாய... தப்பிக்க வங்கியை நோக்கி ஓடிய சஹ்ரா, கைகள் நடுங்க பணத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்...

சுற்றிலும் துப்பாக்கி குண்டுகளின் சப்தங்கள் வானை பிளக்க... வங்கி மேலாளர் சஹ்ராவை உடனடியாக வெளியே சென்றிடுமாறு கெஞ்சுகிறார்...

உடனே வங்கியை விட்டு வெளியேறிய கரிமி வீட்டிற்கு செல்ல டாக்சியைத் தேடினார்...டாக்சி இருக்கிறது..ஆனால் ஓட்டுவதற்குட்ய் தான் ஆட்கள் இல்லை...குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்ற அச்சத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவர் ஓடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பல லட்சம் மக்கள் கண்டு அதிர்ந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்