அதிபர் மாளிகையில் தலிபான்கள் - நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்திருக்கும் நிலையில், சொந்த நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதால் விமான நிலையம் நிரம்பி வழிகிறது.

Update: 2021-08-17 02:46 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்திருக்கும் நிலையில்,  சொந்த நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதால் விமான நிலையம் நிரம்பி வழிகிறது.ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரை கைப்பற்றிய தலிபான்கள், வெளிநாட்டவர்கள் விரும்பினால் காபூலை விட்டு வெளியேறலாம், தொடர்ந்து இருக்க வேண்டுமெனில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவித்து உள்ளனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த தலிபான்கள், அங்கிருக்கும் அறைகளை பார்வையிட்டு வியப்பதுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.மறுபுறம் தலிபான்களுக்கு எதிரான போரில் ராணுவத்திற்கு உதவியர்களும், சொந்த நாட்டு மக்களும் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க வெளிநாடுகளுக்கு செல்ல சார, சாரையாக விமான நிலையத்தை நோக்கி ஓடுகிறார்கள். தங்களை இந்நிலையில் விட்டுவிட்டு அஷ்ரப் கனி மட்டும் தப்பிவிட்டார் என அவரை திட்டிக்கொண்டே செல்கின்றனர். தற்போது அமெரிக்க விமானப்படை கட்டுக்குள் இருக்கும் விமான நிலையத்தை அடைய வாகனங்களும் படையெடுத்ததால், காபூல் நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் நெரிசலுக்கு மத்தியிலும் மக்கள் முண்டியடித்துக்கொண்டு விமான நிலையத்திற்கு நுழைவதால் அங்கும் அசாதாரண சூழல் நிலவுகிறது. 
 


Tags:    

மேலும் செய்திகள்