ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை தலிபன்கள் தடுக்கக் கூடாது - அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை தலிபன்கள் தடுக்கக் கூடாது என்று 60க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை தலிபன்கள் தடுக்கக் கூடாது என்று 60க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டாக சேர்ந்து தங்கள் கோரிக்கைகளை தலிபான்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த அறிக்கையில், சாலைகள், விமான நிலையங்கள், உள்ளிட்டவை திறந்திருக்க வேண்டும் என்றும் அந்நாட்டில் அதிகாரப் பொறுப்பு வகிப்பவர்கள் மக்களின் உயிரையும், உடைமைகளையும் காக்க பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சூழல் மிகவும் மோசமடைந்து விட்ட நிலையில், ஆப்கனில் உள்ள வெளிநாட்டினர் மற்றும் ஆப்கன் மக்கள் வெளியேற அனைவரும் துணை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சிறப்பு குடியேற்ற விசாவிற்குத் தகுதியான ஆப்கனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும், கூறப்பட்டுள்ளது.