ஆப்கானில் ஆட்சியமைத்த தலிபான்கள்; "தலிபான் அரசை அங்கீகரிக்கக் கூடாது" - பிரிட்டன் பிரதமர் காட்டம்
தலிபான்களை ஆப்கானிஸ்தானின் அரசாக அங்கீகரிக்கக் கூடாது என்று, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தலிபான்களை ஆப்கானிஸ்தானின் அரசாக அங்கீகரிக்கக் கூடாது என்று, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்நாட்டில் புதிய நிர்வாகம் விரைவில் ஆட்சியமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கனில் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள், அதிகாரத்தைக் கைப்பற்றினர். அத்துடன் இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலியை நியமனம் செய்து அதிரடி காட்டியது, இந்நிலையில், உலக நாடுகள் யாரும் தாலிபான்களின் அரசாங்கத்தை அங்கீகரிக்கக் கூடாது என்று காட்டமாகத் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா தனது படைகளைப் பின்வாங்கியது தாலிபான்களின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தியதாகவும் பிரிட்டன் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.