ஹைதி தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் - பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 300ஆக அதிகரித்து உள்ளது.

Update: 2021-08-16 04:49 GMT
ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை  ஆயிரத்து 300ஆக அதிகரித்து உள்ளது. கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளி 2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இந்நிலையில்  இடிபாடுகளில் சிக்கி இதுவரை ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. பலர் மாயமாகி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்