அதிபர் மாளிகையில் நுழைந்த தலிபான்கள் - ஆப்கானில் முழு அதிகாரத்தை கைப்பற்றினர்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள், அதிகாரத்தை முழுவதுமாக கைப்பற்றி உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள், அதிகாரத்தை முழுவதுமாக கைப்பற்றி உள்ளனர். ஆப்கன் நாட்டு அதிபர் அஷரப் கனி தாய் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தலீபான்கள் அதிரடியாக காபூல் நகருக்குள் புகுந்தனர். மேலும், தலைநகர் உள்ள அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த அவர்கள், அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றினர். ஆப்கன் போரில் வெற்றி பெற்றதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்ய இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.