ஜப்பானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு - வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்
ஜப்பானில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. குறிப்பாக க்யுஷு பகுதியில் மட்டும் கடந்த 3 தினங்களில் 956 மிமீ மழை பதிவாகியுள்ளது.
ஜப்பானில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. குறிப்பாக க்யுஷு பகுதியில் மட்டும் கடந்த 3 தினங்களில் 956 மிமீ மழை பதிவாகியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களை கவனமாக இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில், சாலைகளை அடித்துச் சென்ற வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பல நகரங்களில் ஆறுகளில் கரை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக இது வரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சிலர் காணாமல் போயிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.