ஸ்பெயினை வாட்டி எடுக்கும் அதீத வெப்பம் - மக்கள் கடும் அவதி
ஸ்பெயினில் கடுமையான வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், பலதரப்பட்ட மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஸ்பெயினில் கடுமையான வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், பலதரப்பட்ட மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோர்டோபா நகரில் கொளுத்தும் வெயிலில் தவிக்கும் டெலிவரி ஊழியர்கள், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகக் கவலை கொள்கின்றனர். மேலும் தலைநகர் மேட்ரிட்டில், டிஸ்னியில் வேலை செய்யும் ஊழியர்கள், தகிக்கும் வெயிலில், குழந்தைகளை மகிழ்விக்க அணியும் கனமிக்க உடையானது, மேலும் அவர்களை சோர்வடையச் செய்துள்ளது. அத்துடன் மேட்ரிட் பகுதியின் வெப்பம் எந்தளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை விளக்கும் வீடியோ ஒன்றில், ஐஸ்கிரீம் அதிவிரைவாகக் கரையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் வெப்ப அலைக்கு கால நிலை மாற்றமே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.