ஆப்கானில் நீடிக்கும் உள்நாட்டு போர்: அமைதி பேச்சுக்கு அரசு அழைப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு அரசு தரப்பு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Update: 2021-08-14 09:50 GMT
அரசுக்கும் தாலிபான்களுக்கு இடையே நீடிக்கும் உள்நாட்டு போர், அந்நாட்டு மக்களை கலங்கடித்து வருகிறது

20 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு எப்போது தீர்வு கிட்டும் என கண்ணீருடன் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர் ஆப்கன் மக்கள்

2001ஆம் ஆண்டு நியூயார்க்கில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தியதை அடுத்து பின்லேடனை பிடிக்க ஆப்கானிஸ்தானில் இறங்கியது அமெரிக்க படை..

அந்த வருடமே தாலிபான்கள் ஆட்சியை அகற்றிய அமெரிக்க படை, 2011ஆம் ஆண்டு பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொன்றதாக அறிவித்தது.

2014க்கு பிறகு மீண்டும் தாலிபான்கள் தலையெடுக்க தொடங்கினர். உள்நாட்டில் மோதல் அதிகரிக்க, 2019ம் ஆண்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்.

கடந்த ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றுவிடும் என அறிவித்தார் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Tags:    

மேலும் செய்திகள்