புகழ்பெற்ற லண்டன் டவர் பாலம் : லண்டன் பாலத்தில் பழுது - பழுது நீக்கும் பணி தீவிரம்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற டவர் பாலத்தில் பழுது ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-08-10 09:58 GMT
தேம்ஸ் நதிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், திறந்து மூடும் வகையிலானது. படகு செல்வதற்காக பாலம் திறக்கப்பட்ட நிலையில், பாலத்தில் பழுது ஏற்பட்டு, திறந்த நிலையிலேயே உள்ளது. கடந்த ஆண்டும் டவர் பாலத்தில் இதேபோன்ற பழுது ஏற்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டு உள்ளதாகவும், அதனை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்