புகைப்பட பத்திரிகையாளர் உயிரிழந்த விவகாரம் - நாடாளுமன்றத்தை சூழ்ந்த பத்திரிகையாளர்கள்
ஜார்ஜியா நாட்டின் நாடாளுமன்றத்தை பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்ஜியா நாட்டின் நாடாளுமன்றத்தை பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பால் புதுமையினர் நடத்திய பேரணியில் புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கக் கோரிய அந்நாட்டு பத்திரிகையாளர்கள், தலைநகர் திபிலிஸியில் உள்ள நாடாளுமன்றத்தை சூழ்ந்தனர். எதிர்க்கட்சிகளும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கியதால் நாடாளுமன்றத்தில், தள்ளு முள்ளு ஏற்பட்டது.