பாலஸ்தீனியரின் வீட்டை இடித்த இஸ்ரேல் - தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மோதல்

இஸ்ரேலிய இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற பாலஸ்தீனியரின் விட்டை, இஸ்ரேல் ராணுவம் வெடி வைத்து தகர்த்தது.

Update: 2021-07-09 08:49 GMT
இஸ்ரேலிய இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற பாலஸ்தீனியரின் விட்டை, இஸ்ரேல் ராணுவம் வெடி வைத்து தகர்த்தது. பழிக்குப்பழியாக நடந்த சம்பவம் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு.இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனிய பகுதிகளை விடுவிக்க கோரும் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய ராணுவத்திற்கும், பல ஆண்டுகளாக மோதல்கள் தொடர்கின்றன.மே மாதத்தில் நடந்த மோதல்களில் 256 பாலஸ்தீனியர்களும், 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய குடிமக்களை திட்டமிட்டு கொலை செய்யும் பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிக்க, சிறப்பு சட்டப் பிரிவு ஒன்றை இஸ்ரேல் அரசு உருவாக்கியுள்ளது.மே 2ஆம் தேதி, மேற்கு கரைப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்பு பகுதியில், ஒரு பாலஸ்தீனியர் கண் மூடித்தனமாக சுட்டதில் ஒரு 19 வயது இஸ்ரேலிய இளைஞர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய 44 வயதான முன்ஸ்டைர் அல் ஸலாபி என்ற பாலஸ்தீனியரை, இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.  அவர் துர்மஸ் அயா என்ற நகரை சேர்ந்தவர்.பின்னர் துர்மஸ் அயாவில் உள்ள அல் ஸலாபியின் வீட்டை, இஸ்ரேலிய ராணுவம கையகப்படுத்தியது. வியாழன் அன்று அல் ஸலாபியாவின் வீட்டை, இஸ்ரேலிய ராணுவம் வெடி வைத்து தகர்த்தது. இது போன்ற தண்டனைகள் மூலம், இஸ்ரேலிய குடிமக்கள் மீது பாலஸ்தீனியர்கள் தாக்குதல்  நடத்துவதை தடுக்க இஸ்ரேல் முயல்கிறது. ஆனால் இப்படி வீடுகளை தகர்ப்பதால், பாலஸ்தீனியர்களின் கோபம் மற்றும் வெறுப்பு அதிகரிப்பதாக பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள்  கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்