ரஷ்யாவில் நடனமாடிக் கொண்டே தூய்மைப் பணியை செய்யும் 82 வயது மூதாட்டி
ரஷ்யாவின் ஜ்லடவுஸ்ட் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் 82 வயது மூதாட்டி ஒருவர், வழக்கமான தனது வேலையையும் சுவாரஸ்யமாக்கும் பொருட்டு ஆடிப்பாடி பணியாற்றி வருகிறார்.
ரஷ்யாவின் ஜ்லடவுஸ்ட் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் 82 வயது மூதாட்டி ஒருவர், வழக்கமான தனது வேலையையும் சுவாரஸ்யமாக்கும் பொருட்டு ஆடிப்பாடி பணியாற்றி வருகிறார். அப்பகுதி பிரபலமான அன்னா பெர்ட்னிகோவா, அங்கு வசிக்கும் மக்களால் அன்யா பாட்டி என்று அன்புடன் அழைக்கப்படுவார். இவர், தன்னார்வமாக தான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தோட்டங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்கு மக்கள் அன்பாக வழங்கும் வெகுமதியும், ஒய்வூதியமும் தனது வாழ்க்கையை நடத்த பொதுமானதாக உள்ளதாக அன்யா பாட்டி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் . மேலும், பாடல் பாடி நடனம் ஆடிக் கொண்டே பணியாற்றும் இவருக்கு சோவியத் பாடல்களும், இந்தியப் பாடல்களில் மெல்லிசையும் தான் மிகவும் விருப்பமானவை என்பது குறிப்பிடத்தக்கது.