உயிருக்குப் போராடும் காதலர்கள் - இருமனம் இணைந்த உருக்கமான நிகழ்வு
பிரிட்டனில் கொரோனா தீவிர சிகிச்சையில் இருக்கும் காதலர்கள், திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பிரிட்டனில் கொரோனா தீவிர சிகிச்சையில் இருக்கும் காதலர்கள், திருமணம் செய்து கொண்டுள்ளனர். எலிசபெத் கெர் மற்றும் சைமன் ஓபிரெய்ன் ஆகிய இருவருக்கும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்னர், இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதில் சைமன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தே திருமணம் செய்துகொண்டனர். இருவரும் விரைவில் குணமடைந்து, புதுவாழ்வை தொடங்க பிரார்த்திப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.