அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன் - அதிகாரப்பூர்வ சான்றளிக்கும் நாடாளுமன்றம்
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு இன்று அமெரிக்க நாடாளுமன்றம், அதிகாரப்பூர்வமாக சான்றளிக்க உள்ளது.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு இன்று அமெரிக்க நாடாளுமன்றம், அதிகாரப்பூர்வமாக சான்றளிக்க உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வு இன்று நடைபெற உள்ளது. அதில், தேர்வுக் குழு வாக்காளர்கள் பதிவுசெய்த வாக்குகள் எண்ணப்பட்டு, ஜோ பைடனை அதிகாரப்பூர்வமாக, அதிபராக அறிவிக்க உள்ளனர். தேர்வுக் குழு வாக்குகளில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் 306 வாக்குகளையும், குடியரசுக் கட்சியின் தற்போதைய அதிபர் டிரம்ப் 232 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.