கொரோனா போரில் வென்ற 99 வயது முதியவர் - 2ம் உலக போரில் ராணுவ வீரராக பணியாற்றியவர்

பிரேசில் நாட்டை சேர்ந்த 99 வயது முதியவரான எர்மாண்டோ பிவேடா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2020-04-16 03:34 GMT
பிரேசில் நாட்டை சேர்ந்த 99 வயது முதியவரான எர்மாண்டோ பிவேடா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் பிவேடா குணமடைந்தார். அவரை மருத்துவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பிவேடா இரண்டாம் உலக போரின் போது ராணுவ வீரராக பணியாற்றியவர். ராணுவ வீரர் என்பதால் அவரது வலிமையான உடல் அமைப்பும் , நோய் எதிர்ப்பு சக்தியும் கொரோனாவை வீழ்த்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போரில் வெற்றி பெறுவதற்கு கடினமாக போராடிய தருணங்களை விட கொரோனாவுடனான போரில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிவேடா கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்