வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை - பணம் வசூலித்த சீன நாட்டவர் கைது
பெரு தலைநகர் லிமாவில் வீடுவீடாக கொரோனா பரிசோதனை செய்த சீன நாட்டவரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டின் சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட துரித சோதனை உபகரணங்களை டியான்ஜிங் என்ற அந்த நபர் திருடியுள்ளார். வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதாகவும், பணியாற்றும் இடத்திலிருந்து திருடிய உபகரணங்களைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.