கொரோனா எதிரொலி : "பொதுத்தேர்தலை ஒத்தி வையுங்கள்" - இலங்கை அதிபருக்கு ரணில் கடிதம்
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு பெரும் அச்ச சூழ்நிலைக்குள் சிக்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
கரோனா குறித்து, மக்களிடம் பெரும் அச்சம் நிலவிவரும் நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்தி வைக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.