கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக கனடா அரசு இந்திய ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் இதுவரை 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை எதிர்கொள்ள ஒரு பில்லியன் கனடா டாலர் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.