இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் - சுகாதாரத்துறை அதிகாரிகள் இடையே அச்சம்
இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்த நாடின் டோரிஸ், வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாக அவர் தமது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடின் டோரிஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட நூற்றுக்கணக்கானோரைத் தொடர்ந்து சந்தித்துள்ளார். இதனால், கொரோனா வைரஸ் அவர் மூலமாக யாருக்காவது பரவியிருக்குமோ? என்ற கவலை, இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.