மனைவியை சுமந்துகொண்டு கணவன் ஓடும் விநோத போட்டி - வெற்றி பெற்ற இங்கிலாந்து ஜோடிக்கு ஒரு பேரல் பீர் பரிசு
இங்கிலாந்து நாட்டின் டார்கிங் நகரில் மனைவியை சுமந்துகொண்டு கணவர் ஓடும் விநோத போட்டி நடைபெற்றது.
இங்கிலாந்து நாட்டின் டார்கிங் நகரில், மனைவியை சுமந்துகொண்டு கணவர் ஓடும் விநோத போட்டி நடைபெற்றது. காற்று மற்றும் ஈரப்பதமான சூழலில், குறைந்தபட்சம் 50 கிலோ எடைகொண்ட மனைவியை தூக்கிக்கொண்டு 380 மீட்டர் தூரம் ஓட வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை. 13வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் முதல் பரிசாக ஒரு பேரல் பீர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான தம்பதியினர் பங்கேற்ற நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த மார்க் திரெல்ஃபால் - கேசி ஏட்ஸ் தம்பதி முதல் பரிசை தட்டிச்சென்றனர்.