இலங்கை பிரதமர் ராஜபக்சே - பிரதமர் மோடி சந்திப்பு

நரேந்திர மோடி உடனான சந்திப்பின் மூலம் இந்தியா - இலங்கை உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை பிரதமர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-09 14:14 GMT
5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்தியா - இலங்கை இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்தும், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டன. இந்த நிலையில், தினத்தந்தி நாளிதழிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில்,   இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாப்பு,  பரஸ்பர வர்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட குறித்து பிரதமர் மோடியுடன் பேசியதாக தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் நெருக்கமாக உறவு வைத்திருக்கிறீர்கள் என்கிற கவலை இருக்கிறதே என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து இந்தியா அச்சப்பட தேவையில்லை என்று குறிப்பிட்டார்.  எதற்காக அஞ்ச வேண்டும் என்றும் இந்தியா பெரிய வலுவான நாடு என்றும் ராஜபக்சே குறிப்பிட்டார். இந்தியா, இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்றும்,  தங்கள் நாட்டுடனான உறவுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகவும் மகிந்த ராஜபக்சே  தெரிவித்தார்.

மாகாண கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் சட்டத் திருத்தம் அதாவது, 13-வது அரசியல் சட்ட திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக தெரிவித்த ராஜபக்சே, அந்த சட்டத்தை மாகாண கவுன்சில் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார்.  உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்றும் ராஜபக்சே தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்