காட்டுத்தீயால் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும் வானம்
ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகை, தென் அமெரிக்காவை நோக்கி செல்வதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகை, தென் அமெரிக்காவை நோக்கி செல்வதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பல மாதங்களாக நிலவிவரும் இந்த காட்டுத்தீ ஏற்கனவே 400 மெகா டன் அளவுக்கு கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயில் சிக்கி கோடிக்கணக்கான விலங்குகளும் உயிரிழந்துள்ளன.