"உணவு, மருந்துக்கு கூட அமெரிக்கா தடை விதித்துள்ளது"

"தடையினால் ஈரானுக்கு எந்த பாதிப்பும் இல்லை"

Update: 2019-09-21 21:55 GMT
ஈரானுக்கு, உணவு மற்றும் மருந்துக்கு கூட அமெரிக்கா தடை விதித்து வருவதாக, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவித் செரீப் குற்றஞ்சாட்டியுள்ளார். தங்கள் நாட்டிற்கு எல்லா வகையிலும் அமெரிக்கா, தொந்தரவு கொடுத்து வருவதாக கூறியுள்ள அவர், இந்த தடைகள், தங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்று கூறினார். ஏற்கனவே இருந்து வந்த தடை தற்போது அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  ஈரான் மக்களும், இத்தகைய தடையால், எந்த பாதிப்பையும் சந்திக்க போவதில்லை என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்