சொகுசு இருக்கையை மறுத்த பிரதமர் மோடி, வலைதளங்களில் மோடிக்கு குவியும் பாராட்டு மழை
சொகுசு இருக்கையில் அமர பிரதமர் மோடி மறுத்து, மற்றவர்களைப் போல சாதாரண இருக்கையிலேயே அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரில் நடைபெற்ற ஐந்தாவது கிழக்கு பொருளாதார அமைப்பு மற்றும் இந்திய, ரஷ்ய 20-வது ஆண்டு இருதரப்பு மாநாட்டில் பங்கேற்ற பின்னர், தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனி சொகுசு இருக்கையும் மற்றவர்களுக்கு சாதாரண இருக்கையும் போடப்பட்டது. அந்த சொகுசு இருக்கையில் அமர பிரதமர் மோடி மறுத்து, மற்றவர்களைப் போல சாதாரண இருக்கையிலேயே அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், பிரதமருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.