அமெரிக்கா : கண்காணிப்பு பணியில் போலீஸ் 'ரோபோ'

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பொதுஇடங்களில் நடக்கும் குற்றச்செயல்களை கண்காணிக்க,பேசும் போலீஸ் ரோபோ பணியமர்த்தப்பட்டுள்ளது.

Update: 2019-06-20 06:02 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பொதுஇடங்களில் நடக்கும் குற்றச்செயல்களை கண்காணிக்க,பேசும் போலீஸ் ரோபோ பணியமர்த்தப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அந்த ரோபோவின் 4 புறமும் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 5-6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள போலீஸ் ரோபா, பூங்காவின் நடைபாதையில் மக்களோடு மக்களாக சுற்றி வருகிறது. நடைபாதையில் யாரேனும் நின்றால் "கொஞ்சம் வழிவிடுங்கள்" மற்றும் "இன்றைய தினம் நல்ல நாளாக அமையட்டும்" போன்ற வார்த்தைகளை கூறி பூங்காவுக்கு வருவோரை கவர்ந்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்