அமெரிக்கா : வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை... சூறைக்காற்றில் நர்த்தனமாடிய மரங்கள்
அமெரிக்காவின் இலினொய் மாகாணாத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான சிகாகோ மற்றும் அதன் புறநகர் பகுதியில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது.
அமெரிக்காவின் இலினொய் மாகாணாத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான சிகாகோ மற்றும் அதன் புறநகர் பகுதியில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது. வானில் இருந்து விழுந்த பனிக்கட்டி பந்துகள், சாலையில் உருண்டோடி வெண் முத்துக்கள் போல் காட்சி அளித்தன. மேலும், யோர்க்வில் உள்பட ஒரு சில இடங்களில் சூறைக்காற்று சுழன்று சுழன்று அடித்தது. ஆலங்கட்டி மழையைத் தொடர்ந்து அங்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.