இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில், ராஜபக்சே சந்திப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு மத்தியில் அந்நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே ஆகியோர் கூட்டாக சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

Update: 2019-04-28 13:06 GMT
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு மத்தியில் அந்நாட்டின்அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே ஆகியோர் கூட்டாக சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடைப்பெற்றது. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து மீளாத மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாமல் உள்ளனர். இந்நிலையில் ஆயர் இல்லத்திலிருந்து பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று காலை ஞாயிறு திருப்பலி ஆராதனையை நடத்தினர். அதை வீட்டில் தொலைக்காட்சி வழியாக தரிசித்து மக்கள் வழிபாடு நடத்தினர். அப்போது பேசிய பேராயர், கருணையே வடிவான கடவுள் பெயரை கூறி மனிதர்களை கொல்வது முரண்பாடான ஒன்று தெரிவித்தார். இந்த ஆராதனையில், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சில அமைச்சர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்