"நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்" - எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்
தொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
தொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் நீரவ் மோடி லண்டன் தப்பி சென்றார். இரு தினங்களுக்கு முன்பு நீரவ் மோடியின் மனைவிக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை பிறப்பித்தது. இந்த நிலையில், தற்போது நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. நீரவ் கைது செய்யப்பட்டால் அவர் உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.