கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்ட தீவிரவாதத் தாக்குதல்களும் பதிலடியும்

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்ட தீவிரவாதத் தாக்குதல்களும்... தற்போதைய பதிலடி பற்றியுமான தொகுப்பு

Update: 2019-02-27 03:04 GMT
2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், பாகிஸ்தான் விவகாரத்தில் கடுமையாக நடந்து கொள்ள
இருப்பதாக கூறியது பாஜக அரசு. அதே நேரம் அமைதி பேச்சுவார்த்தையிலும் ஈடுபாடு காட்டியது.அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், 2016 ஜனவரியில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதலை நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பதான்கோட்டில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம்சாட்டியது இந்தியா.

அதே ஆண்டில் செப்டம்பர் மாதம், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் பதில் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பாகிஸ்தான் தன் ஆட்டத்தை தொடங்கியதால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்தியா, சர்ஜிகல் ஸ்ட்ரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுத்தது.



Tags:    

மேலும் செய்திகள்