குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு - சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
பாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடற்படை அதிகாரியான அவர் உளவு பார்த்ததாகவும், சதி வேலையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டிய பாகிஸ்தான் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதைத் எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான இறுதி விசாரணை தற்போது நடைபெறுகிறது. சர்வதேச நீதிமன்றத்தில் இன்று தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் மூன்று மணி நேர வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.