பிரான்சில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம்

கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்த போலீஸ்

Update: 2018-12-30 04:52 GMT
பிரான்ஸ் நாட்டின் நான்டிஸ் நகரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடைபெற்ற அமைதியான போராட்டம் நேற்று திடீரென வன்முறையாக மாறியது. ஆயிரக்கணக்கான மக்கள்  கூடியிருந்த நிலையில், போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றதால் கலவர பூமியாக அந்த பகுதி காட்சியளித்தது. இதேபோன்று போர்டியுக்ஸ் உள்பட பிரான்சின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து 7- வது சனிக்கிழமையாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்