தனிநபர் ரகசியங்கள் - சமூக வலைதளங்களுக்கு கடிவாளம்

சமூகவலை தள நிறுவனங்கள், தனிநபர் தகவல்களை பகிர்வதை தடை செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்படுகிறது

Update: 2018-12-24 09:25 GMT
சமூகவலை தள நிறுவனங்கள், தனிநபர் தகவல்களை பகிர்வதை தடை செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பாக, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில், கூகுள், டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், அமேசான், உபேர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் தனிநபர்களின் பாஸ்வேர்டு, நிதி விபரம், பயோ மெட்ரிக் விபரம், சாதி, மத, அரசியல் சார்பு உள்ளிட்ட தகவல்களை வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் பகிரக் கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை மீறும் நிறுவனங்களுக்கு 15 கோடி ரூபாய் அபராதம் அல்லது ஆண்டு வர்த்தகத்தில் 4 சதவீதத்தை அபராதமாக விதிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்​பான சட்ட வரைவு விரைவில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்