பிறப்பு விகிதத்தை அதிகரிக்க போராடும் தென் கொரியா
உலகில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படும் தென் கொரியாவில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது.
உலகில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படும் தென் கொரியாவில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக தற்போது 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அனைத்து மருத்துவ செலவையும் அரசே ஏற்கவுள்ளது. கடந்த ஆண்டு 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு மகப்பேறு விடுமுறையை அறிமுகப்படுத்திய அரசு, குழந்தை பராமரிப்பு மானியத்தையும் அதிகரித்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 8 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவழித்து பிறப்பு விகித்தை அதிகரிக்க தென் கொரிய அரசு போராடி வருகிறது.