"ஜனாதிபதியாக வருபவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை" - சிறிசேன மீது மாவை சேனாதிராஜா பரபரப்பு குற்றச்சாட்டு
இலங்கையில் ஜனநாயகத்திற்கு விரோதமான நடைமுறை அமலாவதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன தான் காரணம் என மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
* இலங்கையில் ஜனநாயகத்திற்கு விரோதமான நடைமுறை அமலாவதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன தான் காரணம் என மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டி உள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் முடிவை கடுமையாக விமர்சித்தார்.
* நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக கூறுபவர்கள், ஜனாதிபதியான பின்பு அதனை நிறைவேற்றுவது கிடையாது என்று கூறினார். இதில் சாவின் விளிம்பில் இருந்து தப்பி வந்த சிறிசேனாவும் விதிவிலக்கல்ல என்றும் அவர் குற்றம்சாட்டினார்.