நாடாளுமன்றம் கலைப்பு - கோத்தபயா ராஜபக்சே வரவேற்பு
இலங்கை மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என கோத்தபயா ராஜபக்சே நம்பிக்கை.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை, ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே வரவேற்றுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், ஒரு தேசத்தின் தலைவிதியை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் எனவும் முற்போக்கான எதிர்காலத்திற்கு மக்களின் உண்மையான சக்தி நிலையானதாக வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என நம்புவதாகவும் கோத்தபயா ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
It is the people that decide on the fate of a nation. The genuine power of the people should deliver a stable and progressive future at this critical juncture of our nation. I am confident that the people of Sri Lanka will make the right choice #lka#elections#Hope4SL
— Gotabaya Rajapaksa (@GotabayaR) November 9, 2018