இலங்கை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அடுத்தடுத்த நிகழ்வுகள்

இலங்கையில் தற்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே புதிதாக 13 இணை அமைச்சர்கள், அதிபர் சிறிசேனா முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

Update: 2018-11-02 11:18 GMT
இலங்கையில் தற்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே புதிதாக 13 இணை அமைச்சர்கள், அதிபர் சிறிசேனா முன்னிலையில்  பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம்  அதிபர் சிறிசேனாவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


1. துமிந்த திசாநாயக்க - நீர்பாசனம், நீரியல் வளம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

2. தயாசிறி ஜயசேகர - திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்

3. பியசேன கமகே - இளைஞர், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

4. லக்‌ஷ்மன் செனவிரட்ன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

5. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா- பெருந்தெருக்கள் மற்றும் வீதிஅபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

6. மொஹான் லால் கிரேரு - கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

7. சிரியாணி விஜேவிக்ரம - உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்

8. அங்கஜன் ராமநாதன் - விவசாய பிரதி அமைச்சர்

9. மனுஷ நாணயக்கார - தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

10. இந்திக பண்டாரநாயக்க - வீடுகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

11. சாரதி துஷ்மந்த - நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு பிரதி அமைச்சர்

12. நிஷாந்த முத்துஹெட்டிகம - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர்

13. காதர் மஸ்தான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

Tags:    

மேலும் செய்திகள்