ரனில் மீது ராஜபக்சே குற்றச்சாட்டு...

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் நடவடிக்கைகளில் ரனிலின் ஜக்கிய தேசிய கட்சி ஈடுபட்டதாக, பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2018-10-28 22:45 GMT
* இலங்கையில் நிச்சயமற்ற நிலை நிலவுவதாகவும், அதிபரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் அம்பலமானதுடன் குற்றச்செயல்கள் அதிகரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

* நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்ததற்கு, ரனில் கட்சியின் மத்திய வங்கி நிதி மோசடியே பிரதான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

* இது போன்ற ஒரு ஆபத்தான சூழலில், அதிபர் சிறிசேனாவின் அழைப்பை ஏற்றே பிரதமராக தான் பதவியேற்று கொண்டதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

* மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்தி மக்களுக்கு மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்