தள்ளாடும் வயதில் தளராத ஈடுபாடு : 106 வயதிலும் தொடரும் சைக்கிள் ஓட்டம்
பிரான்ஸில் 106 வயதான சைக்கிள் பந்தய வீரர், தொடர்ந்து சைக்கிள் ஓட்டத்தில் ஈடுபட்டு அசத்தி வருகிறார்.
பிரான்ஸில் 106 வயதான சைக்கிள் பந்தய வீரர், தொடர்ந்து சைக்கிள் ஓட்டத்தில் ஈடுபட்டு அசத்தி வருகிறார். அடுத்த மாதம் 107 வயதை எட்டவிருக்கும் ராபர்ட், தமது 105 வது வயதில் ஒரு மணி நேரத்தில் 22 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதயம் பலவீனமாகும் என்பதால், சைக்கிள் ஓட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்தும், தமது அளவில்லா ஈடுபாட்டின் காரணமாக அவ்வபோது சைக்கிள் ஓட்டி மகிழ்கிறார்.