அமெ. முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிலாரிக்கு வெடிகுண்டு பார்சல்
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவருடைய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவருடைய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* வாஷிங்டனில் உள்ள ஒமாமாவின் வீடு மற்றும் ஹிலாரி கிளிண்டனின் நியூயார்க் வீட்டிற்கும் வெடிப்பொருட்கள் அடங்கிய மர்ம பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், வழக்கமான சோதனையின் போது இதனை கண்டுபிடித்து உளவுத்துறை தடுத்துள்ளது. வரும் 6-ம் தேதி செனட் தேர்தலை சந்திக்கவுள்ள அமெரிக்காவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, எங்கிருந்து அவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டது என்பது குறித்து, FBI,, உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் முயற்சிக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல், பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனமாக சி.என்.என். அலுவலகத்துக்கும் மர்ம பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.